தென்றல்
8 07 2008மறுமொழிகள் : மறுமொழி இல்லை »
வகைகள் : கவிதை
15.06.2008 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழிமையத்தில் சபா.இராஜேந்திரன் அவர்களின் “கலவை” முதல் சிறுகதைதொகுப்பு (தங்கமீன் பதிப்பக வெளியீடு) வெளியடப்பட்டது.
இந்த வெளியீட்டுவிழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பலருக்கும் பத்து தினங்களுக்கு முன்னரே “கலவை” சிறுகதை புத்தகத்தை அவர்களின் வீட்டுமுகவரிக்கு அனுப்பிவைத்துவிட்டார் நூலாசிரியர். காரணம் புத்தவெளியீட்டன்று தொடர்ந்து மாலை நடைபெற்ற வாசக கலந்துரையாடலே !
சிங்கப்பூர்ல் புத்தக வெளியீடு என்றால் இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால் “கலவை“ சிறுகதைதொகுப்போ வாசகனும் எழுத்தாளனும் சேர்ந்த கலவையை மையப்படுத்தி காலை 10.30 மணியிலிருந்து 12.30 வரை ஐந்து எழுத்தாளர்களின் பார்வையில் கலவை என்ற ஆய்வும் அதன்பின் 1.30 மணிமுதல் மாலை 4.30மணிவரை பத்து சிறுகதைகள் அடங்கிய “கலவை” சிறுகதை மீதான வாசகர்பார்வை அதற்கு நூலாசிரியரின் பதில் பின்னர் ஒட்டுமொத்த வாசகப்பார்வையின் தொகுப்புரை என்று பிரமிக்கசெய்யும்மளவு வித்தியாசமாக நடைபெற்றது இனிவரும் ஆரோக்கியமான புத்தகவெளியீட்டிற்கு முன்மாதிரியாக இருக்ககூடும்.
தங்கமீன் பதிப்பத்தின் ஏற்பாட்டால் நடைபெற்ற இவ்விழாவில் நிகழ்ச்சியை தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் நெறிப்படுத்திச்சென்றார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் சங்க கழக செயலாளர் சுபஅருணாச்சலம் வரவேற்றுப் பேசினார்.
என்பார்வையில் கலவை என்று எழுத்தளார் புதுமைத்தேனி மா.அன்பழகன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் எழுத்தாளர் நா. ஆண்டியப்பன் எழுத்தாளார் குமாரி சூர்யரெத்னா கவிஞர் நீதிப்பாண்டி என்ற பாண்டித்துரை (நான்) ஒலி 96.8ன் மூத்த செய்திநிர்வாகி செ.ப.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்
மதிய உணவிற்குபின் எழுத்தாளர்கள் திரு.இரா.கண்ணபிரான் திருமதி.கமலாதேவி அரவிந்தன் இருவரின் கலைவைபற்றிய பார்வையிலான கட்டுரைகளின் வாசிப்பினையடுத்து திரு.அருண் மகிழ்நன் கலந்துரையாடலை வழிநடத்திச்செல்ல கதைக்கருவை பற்றி கலந்துரையாடியபொழுது ஒரு ” மாணவன் - ஒரு நாள் - ஒரு ஆசிரியை ” என்ற சிறுகதை பலரின் விமர்சனங்களுக்கு உட்பட்டது. ” தடுமாற்றம் ” ” இன்னசெய்தாரை ” போன்ற சிறுகதைகளும் தொடர்ந்து அதிகம் விவாதிக்கப்பட்டது. மொழிபற்றிய பார்வையில் ஆங்கில கலப்புபற்றியும் ஆசிரியர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அதானாலான எதிர்பார்ப்புகள் என்று தொடந்த கலந்துரையாடலின் முடிவில் விமர்சகர் ந.சுப்பிரமணியம் தொகுப்புரையாற்றினார். இறுதியாக நூலாசிரியர் சபா.ராஜேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.
புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு பயிற்சிபட்டறையே. இதுபோன்ற நிகழ்வுகள்தான் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை ஆரோக்கியமாகவும், அடுத்தகட்ட நகர்வினை நோக்கி இட்டுச்செல்லும் காரணியாகவும் இருக்ககூடும்
நன்றி: www.tamiloviam.com “கலவை” சிறுகதை தொகுப்பு வெளியீடு
பாண்டித்துரை
|
எனது ப்ரத்யோகமான pandiidurai@yahoo.com மின்னஞ்சலில் என்னுடைய http://pandiidurai.wordpress.com வலைப்பக்கத்தையும் என்கிற வலைப்பக்கத்தையும் இணைத்திருந்தேன். எழுத்தாளர் சாருவிற்கு சில மின்னஞ்சல்கள் அனுப்பத்தொடங்கியதை தொடர்ந்து அவ்வளவாக பதிவுசெய்யமால் இருந்த எனது நகுலன் வலைதளத்தை பின்னினைத்து நான் வலைதளத்தில் படித்த ஒரு கட்டுரையை நீங்கள் படித்திருக்கூடும் என்று சொல்லி அனுப்பியிருந்தேன்.
சமீபகாலமாக சாருஆன்லைன் மாற்றம் செய்தபின்னர் வலைதளம் பற்றிய பதிவுகளை சாரு பதிவுசெய்வதால் எனது நகுலன் வலைதளம் கவனிக்கப்படக்கூடும் என்பதே (சாருவிற்கு எழுத்தளர் நகுலன்மீதான ஈடுபாடு பலரும் அறிந்த ஒன்றே). அப்படி நான் மாற்றம் செய்து பின்னினைத்ததற்கு முதல்நாள்தான் முகமறியா நண்பன் கென்னின் பிறந்தநாள்.
சாருவிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கு பின்னினைத்துள்ளேன்.
Re: hope charu Saturday, 28 June, 2008 07:41 From: “charunivedita” <charunivedita@charuonline.com>
எல்லாம் அமையவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா. அன்று எனக்கு அப்படித்தான் போல, எனது முதலாளி பணிநிமித்தம் மலேசியா செல்ல நான் மட்டும் அலுவலகத்தில் இருந்ததால் உடனே சாருவிற்கு தொடர்பு கொண்டேன்.
சாருவிடம் நான் பேசியபொழுதெல்லாம் ஐயா என்றே விளித்தேன் எனக்கு சங்கடமாகவே இருந்தது. சிங்கப்பூரில் நான் இப்படி பழக்கப்பட்டுவிட்டேன். உங்களின் கவிதைகளை பற்றிய பதிவினைதான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றார். “கென்“ கவிதை பற்றி பேசியபொழுது என்னுள் பதட்டம், என் கவிதையாக பாவித்தே என்னிடம் பேசியதும் உடனே இல்லை ஐயா அவை எல்லாம் கென்னின் மடிநிறைய கற்கள்(மின்) கவிதைதொகுப்பிலிருந்து நான் தேர்ந்தெடுத்து கென்-னை வாழ்த்திய வரிகள் என்றேன். (அப்படி சொல்லமல் விட்டிருந்தால் அன்றையபொழுதில் கென் தலைப்பிலான கவிதை பாண்டித்துரையின் கவிதை என்றே வெளிவந்திருக்கும்)
அப்ப “பேசுவதற்கு நிறைய இருக்கிறது“ கவிதை என்று வினவ
அது என்னுடைய கவிதை என்றேன்.
“பால்யத்தின் கனவுகள் காலாவதியாகவிட்டன“ கவிதை என்று மீண்டும் வினவ
அதுவும் என்னுடைய கவிதை என்றேன்.
இரண்டு கவிதையும் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றார். பின்னர் உங்களின் கவிதைக்கு கீழே உங்களின் பெயரினை போட்டுவிடுங்கள் அப்பொழுதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் வராமலிருக்கும் என்றார், சரி என்றேன். (பேசிமுடித்தவுடன் உடனே எனது கவிதைகளின் கீழே எனது பெயரினை பதிவுசெய்தேன், சிறுகதைகளில் சிலவற்றிற்கு மட்டும் முன்பே பதிந்திருந்தேன்) பின்னர் கென்னின் கவிதைகளை அனுப்பவியலுமா என்றார். பின்னர் நகுலன் வலைதளப்பக்கத்தில் உள்ள அழகர்சாமி பற்றிவிசாரித்தார் குங்குமம் இதழில் வெளிவந்தது, எனக்கு அவரைபற்றி தெரியாது என்றுச் சொல்லி அந்த வலைப்பக்கத்தின் நோக்கத்தினை எடுத்துக்கூறினேன். (அதுவரையில் இரண்டுபதிவுகள்தான் நான் பதிவுசெய்திருந்தது. நகுலன் வலைதள நோக்கம்பற்றியெல்லாம் அப்பொழுது எழுதவில்லை)
அதவிட நமக்கு வேறவேலை என்னனு நினைத்துகொண்டு அடுத்த நிமிடமே மடிநிறைய கற்களை இறக்கிவைத்தேன், அப்படியே கென்னின் இணையமுகவரியையும் அனுப்பிவைத்தேன். பின்னர் இந்த எண்ணிற்கு எப்பொழுது வேண்டும் என்றாலும் அழைக்கலாமா என்றேன், அழைக்கலாம் என்றார்.
கென்னை தொடர்பு கொண்டு சாருவிடம் பேசியதையும், சாரு உங்களின் கவிதைகள் பற்றி கேட்டதையும் சொல்லி நான் மடிநியை கற்களை அனுப்பிவிட்டேன் என்றபொழுது சாருவிடமிருந்து வந்த மின்னஞ்சலை அனுப்பவியலுமா என்று கேட்டார் சாருவிடம் நான்பேசியதுபற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு அந்த ஒருவரி மின்னஞ்சலை அனுப்பினேன் (அதான்பா மேலே கொடுத்திருப்பது) அத்துடன் சாருவின் தொலைபேசியென்னும்.
சரி நம்மவலைப்பக்கம் பற்றிய செய்தி வரலாம் என நினைத்துக்கொண்டு அன்று விடுமுறை என்பதால் எனது வாரஇறுதிநாட்களுக்கான பயணத்தில் நான். (திங்களன்றே இணையபக்கம் மீண்டுவருவது) . மாலை கென்னிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, பாண்டி charuonline பார்த்திங்களா. “கென்“ கவிதையும் உங்களின் கவிதையும் வந்துள்ளது என்றார், ரொம்ப சந்தோசமாக இருக்கு பாண்டி எல்லாம் உங்களாலதான் என்றார். என்ன கென் எனக்குபோய் நன்றி சொல்லிக்கொண்டு, எல்லாம் உன்னாலதான் உனக்குத்தான் நான் நன்றி சொல்லனும் என்றேன். (கென் என்ற தலைப்பிலானா |